தமிழ் சினிமாவில் மூத்த இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. காலத்தால் அழியாத எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளவர். ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்து தனக்கு என தனி ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்த இவர் வெளிநாட்டில் சென்று சிம்பொனி இசையமைத்து பெருமை சேர்த்தார். இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது என்ற அளவுக்கு மிகவும் பிரபலம். இந்நிலையில் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட இருக்கிறது.
இதைப் பற்றி பேசிய இசைஞானி இளையராஜா தமிழ்நாடு அரசு சார்பில் தனக்காக நடத்தப்படும் பாராட்டு விழாவை மிகவும் பெருமிதமாக கூறியதோடு அதை நினைத்து நெகிழ்ச்சியாகவும் பேசினார். இது தொடர்பான வீடியோவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இது இசை அரசனுக்கு மட்டுமல்ல, அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை ரசிகர்களுக்குமான பாராட்டு விழா என்று பதிவிட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் வருகிற 13-ஆம் தேதி இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கதாகும்.
“ராஜாவைத் தாலாட்டும் தென்றல்” – நம் பாராட்டு விழா!
இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல; அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை இரசிகர்களுக்குமான பாராட்டு விழா!#இளையராஜா @ilaiyaraaja pic.twitter.com/7QWRbdAawZ
— M.K.Stalin (@mkstalin) September 10, 2025
