தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் 3 புதிய திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக மாணவர்களிடையே சாதி ரீதியான மோதல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் இதைத் தடுக்கும் வகையில் மாணவர்களின் கையில் வண்ணக் கயிறுகள் கட்டத் தடை, பள்ளி குழந்தைகளின் பெற்றோருக்கு வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அனுப்புதல், பள்ளிகளில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்தல் ஆகிய திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளது.