நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  மழை குறைந்து அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கினாலும் மாஞ்சோலை செல்வதற்கு தடை நீடிக்கிறது. இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி உள்ளிட்ட  வானிலை மையம்  மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.