உலகம் முழுவதும் தற்போது மனிதனின் வேலையை சுலபமாகும் விதமாக நவீன மயமாக்கப்பட்ட பல கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் தமிழக முற்பட பல மாநிலங்களில் தெருக்களில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்வது, கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் செப்டிக் டேங்க் கிளீனிக் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் மனிதர்கள் செய்து வருகிறார்கள். குறிப்பாக செப்டிக் டேங்க் கிளீனிங் நடைபெறும் போது உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கருவிகள் மூலமாக இனி கழிவு நீரை சுத்தப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் சண்டிகர் மாநிலத்தில் முனிசிபல் கார்ப்பரேஷன் சார்பாக கழிவுநீர் குழாய்களை முறையாக சுத்தப்படுத்துவதற்கு நவீனக் கழிவுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சண்டிகர் மாநிலத்தில் கழிவு நீரை உறிஞ்சும் ரோபோக்கள் மட்டுமல்லாமல் சில்டிங் கிராபிக் மெஷின்கள், டிசில்டிங் உறிஞ்சும் இயந்திரங்கள், கழிவு நீர் ஆய்வு கேமராக்கள், பவர் ரோடு இயந்திரங்கள் மற்றும் சாக்கடை வேர் வெட்டும் கருவிகள் என பல அதிநவீன கருவிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.