கள்ளக்குறிச்சியில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, மாநிலச் செயற்குழு உறுப்பினரும், பெண் காவல்துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்ததாக சர்ச்சையில் சிக்கியவருமான ஸ்ரீதரனுடன் உதயநிதி ஸ்டாலின் எடுத்துக் கொண்ட செல்ஃபி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>

அந்தப் புகைப்படத்தை உதயநிதி தனது பக்கத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து, திமுக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், அந்தப் புகைப்படத்தை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அடடே, என்ன ஒரு ஆட்சி” எனக் கடுமையாக சாடியுள்ளார். பெண் காவலரை தாக்கிய குற்றச்சாட்டில் விவாதத்துக்குள்ளான நபருடன் செல்ஃபி எடுத்து பகிர்ந்தது, திமுக அரசின் போக்கை வெளிப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம், அரசியல் வட்டாரத்தில் மேலும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

“>