உறவுகளின் புனிதத்தைச் சிதைக்கும் வகையில், தனது சொந்த மகளையே திருமணம் செய்த தந்தைக்கும், அதற்கு உடந்தையாக இருந்த மகளுக்கும் அமெரிக்க நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஒரு விசித்திரமான பந்தயத்திற்காக அரங்கேறிய இந்தச் சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது.

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்தவர் ட்ராவிஸ் ஃபீல்ட்குரோவ். இவருக்கு கடந்த 2000-ஆம் ஆண்டு சமந்தா என்ற மகள் பிறந்தார். மகள் பிறந்த சில காலத்திலேயே மனைவியைப் பிரிந்து சென்ற ட்ராவிஸ், மகளைப் பார்க்கவே இல்லை. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது 20-வது வயதில்தான் சமந்தா தனது தந்தையை முதன்முதலில் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு தந்தை-மகள் உறவு தவறான பாதையில் சென்றது. சமந்தாவிற்கு அவரது மாற்றாந்தாய் சகோதரியுடன் தீராத பகை இருந்துள்ளது. அந்தச் சகோதரியை மட்டம் தட்டுவதற்காகவும், ஆத்திரமூட்டுவதற்காகவும் சமந்தா ஒரு விபரீத பந்தயம் கட்டியுள்ளார். அதன்படி, தனது சொந்தத் தந்தையுடனேயே உடலுறவு கொண்டு, அவரைத் திருமணமும் செய்து கொள்வதாகச் சவால் விட்டுள்ளார். அந்தச் சவாலை நிறைவேற்றத் தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார்.

இருவரும் திருமணம் செய்து கொண்ட தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். ஆரம்பத்தில் இருவரும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருந்ததால், தாங்கள் தந்தை-மகள் இல்லை என மறுத்தனர். ஆனால், காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் நடத்திய ‘டிஎன்ஏ’ (DNA) சோதனையில், ட்ராவிஸ் தான் சமந்தாவின் தந்தை என்பது சதவீதம் உறுதியானது.

சட்டப்படி தந்தை-மகள் திருமணம் செய்து கொள்வது கிரிமினல் குற்றமாகும். இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, நீதிபதி இருவரையும் கடுமையாகக் கண்டித்தார். குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம், தந்தை ட்ராவிஸுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மகள் சமந்தாவிற்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்தது. மேலும், சிறையிலிருந்து விடுதலையான பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் எந்தக் காலத்திலும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் நீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.