ஒயிட் ஹவுஸ் நிருபர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் 31 வயது கோல் தாமஸ் ஆலன் , தனது சிறப்பான கல்விப் பின்னணியால் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களின்படி, இவர் 2017-ல் புகழ்பெற்ற கால்டெக் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர் என்றும், 2025-ல் கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக, 2014-ம்ஆண்டு நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் ஆராய்ச்சி மாணவராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு இருப்பதாகத் தெரிகிறது. இவரது கல்வித் தகுதிகள் ஒருபுறம் இருக்க, சி2 எஜுகேஷன் என்ற அமைப்பில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து 2024-ல் ‘சிறந்த ஆசிரியர்’ விருதையும் இவர் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
<a href=”http://

“>

இதுமட்டுமின்றி, கணினி விளையாட்டுகளை உருவாக்குவதிலும் இவருக்கு அதீத ஆர்வம் இருந்துள்ளது. இவ்வளவு உயரிய கல்வி மற்றும் தொழில்நுட்பத் திறன் கொண்ட ஒருவர், இத்தகைய ஒரு பாதுகாப்பு மீறல் சம்பவத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ரகசிய சேவை உள்ளிட்ட பல்வேறு ஏஜென்சிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.