
டெல்லியில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. இளம்பெண்கள் கவர்ச்சி உடையில் நடனம் ஆடுவது, இளம் ஜோடிகள் அத்துமீறல் போன்றவை சமூக வலைதளங்களில் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் டெல்லி மெட்ரோ ரயிலில் இளம்பெண் ஒருவர் கவர்ச்சியாக நடனமாடும் காட்சிகள் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் இளம்பெண் கவர்ச்சியுடன் ஆபாசமாக நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் இருக்கிறது. இதனை பார்த்த பலரும் அந்த பெண்ணை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு நின்று விடக்கூடாது அவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram