தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவியை ஆசிரியர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அதாவது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கண்டி வாடாவில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை அதே பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு 40 வயது ஆசிரியர் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு கோவிலில் வைத்து திருமணம் நடந்ததாக கூறப்படும் நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலானது.
இதைத்தொடர்ந்து திருமணத்தை நடத்தி வைத்த கோவில் பூசாரி உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
