சத்தீஸ்கர் மாநிலத்தின் தாராசிவ் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் இரு ஆசிரியர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் ஆசிரியரான வினீத் துபே, சம்பவத்தன்று இந்தி ஆசிரியர் கஷ்யப் எடுக்க வேண்டிய வகுப்பிற்கு சரியான நேரத்தில் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஆனால், கஷ்யப் பள்ளிக்கு தாமதமாக வந்ததால், இந்தச் சம்பவம் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், வகுப்பறையிலேயே வினீத் துபே மீது கஷ்யப் தாக்குதல் நடத்தத் தொடங்கினார்.
सारंगढ़-बिलाईगढ़ के धारासीव हाई स्कूल में दो शिक्षकों के बीच हुई मारपीट ने शिक्षा व्यवस्था पर गंभीर सवाल खड़े कर दिए हैं। पढ़ाने को लेकर शुरू हुआ विवाद बच्चों के सामने लात-घूंसे तक पहुंच गया। डर के कारण छात्र कक्षा से भागते नजर आए। स्कूल बच्चों को सुरक्षा और शिक्षा देने का स्थान… pic.twitter.com/NmeR42rCMz
— Jaydas Manikpuri (@JayManikpuri2) September 12, 2025
இந்த மோதலைப் பார்த்து மாணவர்கள் பயந்து வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர். ஆனால், ஆசிரியர்கள் இருவரும் சண்டையை நிறுத்தவில்லை. வகுப்பறையில் தொடங்கிய இந்த மோதல், ஆசிரியர்களுக்கான அறையிலும் (ஸ்டாஃப் ரூம்) தொடர்ந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு, கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த மோதலின் போது, ஒரு ஆசிரியர் மற்றவரின் வீடியோவை எடுத்து, அது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முழு சம்பவமும் பள்ளியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
