சமூக வலைதள உலகம் மிகவும் விசித்திரமானது. அங்கு எப்போது, எது வைரலாகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. சில நேரங்களில் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத காட்சிகள் அரங்கேறுவதுண்டு. அந்த வகையில், தற்போது ரயிலுக்குள் நபர் ஒருவர் செய்த காரியம் இணையவாசிகளை அதிர வைத்துள்ளது.

பொதுவாக ரயில்களில் பயணிகள் ஏறுவதற்கே இடமில்லாமல் தள்ளுமுள்ளு ஏற்படும். ஆனால், வைரலாகி வரும் இந்த வீடியோவில், நபர் ஒருவர் தனது சைக்கிளுடன் ரயிலின் பெட்டிக்குள் நுழைகிறார். உள்ளே சென்றதுடன் நிற்காமல், அங்கிருந்த பயணிகளுக்கு இடையே மிகவும் ஸ்டைலாக சைக்கிள் ஓட்டத் தொடங்குகிறார். அவர் சைக்கிள் ஓட்டிய விதம் மற்றும் ரயிலுக்குள் சைக்கிளைக் கொண்டு வந்த துணிச்சலைப் பார்த்த பயணிகள் ஒரு நிமிடம் திகைத்துப் போயினர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Trevling_🎶❤️ (@trevling_99)

இன்ஸ்டாகிராமில் ‘trevling_99’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது “பெட்ரோல் விலை உயர்வால் வந்த விளைவு இது”, “அடுத்ததாக ரயிலுக்குள் கார் ஓட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” எனப் பலரும் வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம், “பொதுப் போக்குவரத்தில் இது போன்ற ஆபத்தான செயல்களைச் செய்வது பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும்” எனச் சில சமூக ஆர்வலர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் எந்த ஊர் ரயிலில் நடந்தது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை என்றாலும், இணையத்தில் இந்த வீடியோ பெரும் ‘தகராறை’யே ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவை ‘லைக்’ செய்துள்ள நிலையில், இந்திய ரயில்வே இது போன்ற செயல்களுக்குக் கடும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.