பாலிவுட் நடிகை நீலு கோலியின் கணவர் ஹர்மிந்தர் சிங் பாத்ரூமில் விழுந்து மரணமடைந்தார். இந்த சம்பவம் நடைபெற்றபோது வீட்டில் உதவியாளர் மட்டுமே இருந்ததாக சொல்லப்படுகிறது. ஹர்மிந்தர் பாத்ரூமிற்குள் செல்லும்போது நலமாகவே இருந்ததாகவும் வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்தபோது இறந்து கிடந்ததாகவும் உதவியாளர் காவல்துறையினரிடம்
கூறியிருக்கிறார். ஹர்மிந்தர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.