சூர்யவம்சம், படையப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை லாவண்யா. தற்போது இவருக்கு 44 வயதாகிய நிலையில் தொழில் அதிபர் பிரசன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது இந்தநிலையில் இந்த திருமணம் சர்ச்சையான நிலையில் எதற்காக தாமதமாக திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பதை கூறியுள்ளார்.

அதாவது, ‘சிறுவயதில் நடிப்பில் கவனம் செலுத்தியதால் திருமணம் செய்துகொள்ள நேரம் கிடைக்கவில்லை. என் வயது 44 எல்லாம் கிடையாது, வெறும் 43தான்’ என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.