தற்போதைய காலகட்டத்தில் திருமண விஷயங்களில் பெண்கள் தன்னுடைய வருங்கால கணவர் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும், சொந்த கார், வீடு போன்ற ஆடம்பர வாழ்க்கையை வழங்குபவராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் இருக்கின்றனர். சமீபத்தில் மண்டியா மாவட்டம் கே.ஆர் பேட்டையில் ஆதிசுஞ்சனகிரி மதம் சார்பாக ஒக்கலிக சமுதாய மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் 25,000 திற்கும் அதிகமான வாலிபர்கள் மணப்பெண்களை தேடி முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் வெறும் 800 பெண்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனால் சுமார் 24000 பேர் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பெண்கள் அதிக சம்பளம் வாங்கும் நபரை வாழ்க்கை துணையாக  தேடுகின்ற காரணத்தினால் தங்களுக்கு பெண் கிடைக்காமல் சிக்கல் நீடிப்பதாகவும் நடுத்தர இளைஞர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் 30 வயதை கடந்த ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு பெண் கிடைக்காத காரணத்தினால் அவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து தங்களுக்கு விரைவாக திருமணம் நடக்க வேண்டும் என வேண்டி சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூரில் உள்ள பிரசித்தி பெற்ற மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாதயாத்திரை செல்வதற்கு முடிவு செய்துள்ளனர். இதில் மண்டியா மாவட்டம் மட்டுமல்லாமல் கோலார், பெங்களூர், சிவமெக்கா உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா பாரதிநகர் திருமணமாகாத வாலிபர்கள் திட்டமிட்டபடி நேற்று வந்தனர். அவர்கள் நேற்று காலை பாதயாத்திரை தொடங்கியுள்ளனர். நேற்று பாதயாத்திரை தொடங்கிய வாலிபர்கள் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோவிலை நாளை சென்றடைகின்றனர். அங்கு அவர்கள் திருமண வரன் வேண்டி மலை மாதேஸ்வர சாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்த இருக்கின்றனர்.