ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட கனமழையால், ரஜோரி மாவட்டத்தின் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த சூழலில், ஒரே சிறுவன் அந்த ஆற்றை கடக்க முயற்சித்தபோது, அச்சமயம் ஏற்பட்ட வெள்ள ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டான். உயிர்பிழைக்க அதிஷ்டவசமாக , ஒரு பாறையை இறுகப் பிடித்துக் கொண்ட அந்த சிறுவன், பயத்தில் உறைந்த நிலையில் நீரில் சிக்கிக்கொண்டான்.
வெள்ள ஓட்டம் அதிகமாக இருந்ததால், அப்பகுதி மக்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டும் சிறுவனை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது, இந்நிலையில், சம்பவம் குறித்து உடனடியாக மாநில மீட்புப் படையினருக்கும், போலீசாருக்கும் மற்றும் ராணுவத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும், அவர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையைக் கண்காணித்தனர்.
🚨 9yr old boy rescued from flash flood in Rajouri, J&K
Child got trapped in a river while grazing cattle amid sudden flash floods
Army, SDRF, Police & local divers carried out a 3-hour joint operation
Army used a helicopter to airlift the boy to safety
Locals hailed the… pic.twitter.com/oWgiqySNbf
— Nabila Jamal (@nabilajamal_) July 23, 2025
“>
அதனைத் தொடர்ந்து, சிறுவனை காப்பாற்ற ராணுவ ஹெலிகாப்டரின் உதவியை நாடினர். அதில் வந்த வீரர்கள், ஆற்றின் நடுவே பாறையில் சிக்கிய சிறுவனை பாதுகாப்பாக ஹெலிகாப்டரிலே தூக்கி மீட்டனர். சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டதும், உடனடியாக அவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த அதிரடி மற்றும் துரிதமான செயலுக்காக இந்திய ராணுவத்துக்கு, அப்பகுதி மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
