2014ல் 55 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் 2023ன் படி 160 லட்சம் கோடியை எட்டியுள்ளது.  ஒரு நாட்டின் கடன் என்பது அந்த நாட்டின் மக்கள் தலையில் தான் விழுகிறது. அதன்படி, 2014-க்கு முன் இந்திய குடிமகன் ஒருவர் மீது சராசரியாக 43,000 கடன் இருந்த நிலையில் தற்போது 31 லட்சத்து 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன் இந்தியாவை 67 ஆண்டுகளாக 14 பிரதமர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் வைத்து விட்டுச் சென்ற கடன் தொகை ரூபாய் 55 லட்சம் கோடி தான்.

ஆனால், 2014 இல் மோடி ஆட்சிக்கு வந்தது முதற்கொண்டு கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூபாய் 100 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இத்தகைய பெரும் கடன் சுமைக்கு பிரதமர் மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே காரணம். 2023 -ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவின் மொத்த கடன் ரூபாய் 169 லட்சம் கோடி. கடந்த 9 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு இந்தியாவின் கடன் உயர்ந்திருக்கிறது என்று கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.