நாட்டில் இருவது பல்கலைக்கழகங்கள் போலியானவை என்றும் இவை எந்த பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை எனவும் யுஜிசி அறிவித்துள்ளது. நம்முடைய நாட்டில் செயல்படும் போலி பல்கலைகள் குறித்த பட்டியலை யுஜிசி செயலாளர் நேற்று வெளியிட்ட நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என தெரிய வந்துள்ளது.

அதில் டெல்லியில் 8 போலி பல்கலைகள், உத்திரபிரதேசம் மாநிலத்தில் நான்கு பல்கலைகள், ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா இரண்டு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரியில் தலா ஒன்று போலி பல்கலை என கண்டறியப்பட்டுள்ளது. யுஜிசி சட்ட விதிகளுக்கு மாறாக பல கல்வி நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவது கவனத்திற்கு வந்த நிலையில் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் மற்றும் உயர்கல்வி அல்லது வேலை வாய்ப்பு நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்படாது எனவும் இந்த பல்கலைகள் எந்த பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை எனவும் யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.