கர்நாடக மாநிலத்தில் பொம்மனஹால் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள மெட்டகால் என்ற கிராமம் அமைந்துள்ளது. இதில் பொம்மனஹால் கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு எருமை மாட்டை கிராமத்து தேவதைக்கு பலி கொடுப்பதற்காக வளர்த்து வருகிறார். இந்த எருமை மாட்டுக்கு 5 வயது ஆகிறது. இந்த எருமை மாடு கடந்த சில தினங்களுக்கு முன்பாக காணாமல் போன நிலையில் அதனை யாரோ சிலர் திருடிவிட்டதாக கூறப்பட்டது. விவசாயி தன்னுடைய மாட்டை தேடி வந்த நிலையில் அது மெட்டகால் கிராமத்தில் இருப்பது தெரிய வந்தது. அதன்பிறகு அவர் தன்னுடைய எருமை மாட்டை அழைத்து வர முயற்சி செய்த நிலையில் அதற்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதாவது அந்த கிராம மக்கள் அந்த மாடு எங்களுக்கு சொந்தமானது என்றும் எங்களுடைய கிராம தேவதைக்கு பலி கொடுப்பதற்காக நாங்கள் வளர்த்து வந்ததாகவும் அதனுடைய தாய்மாடும் எங்களிடம் தான் இருக்கிறது என்றும் கூறினார்கள். ஆனால் அந்த விவசாயி  அந்த மாடு எனக்கு சொந்தமானது என்று கூறுகிறார். இதன் காரணமாக அந்த விவசாயி தன்னுடைய கிராம மக்களை அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பலன் கிடைக்காததால் இறுதியில் காவல் நிலையத்திற்கு சென்றனர். ஆனால் போலீசாராலும் இவர்களுடைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. மேலும் இதனால் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.