ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சரூந்த் கிராமத்தில் ஒரு விவசாய நிலம் உள்ளது. இதன் அருகே 700 அடி ஆழத்தில் பாசனத்திற்காக ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்டது. ஆனால் அதில் நீர் ஊறாததால் அப்படியே திறந்த நிலையில் கிடந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு 3 வயது பெண் குழந்தை எதிர்பாராத விதமாக அதில் விழுந்தது.

இது தொடர்பாக தீயணைப்பு துறை நற்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 9 நாட்களாக அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில் இன்று 10-வது நாளில்  சிறுமியை உயிருடன் மீட்டனர். அந்த சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.