ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு ஒருவர் 5 கிலோ தங்க நகை அணிந்து வந்தது கவனத்தை ஈர்த்து அது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார்.
இவர் ஒலிம்பிக் சங்க இணைச் செயலாளராக இருக்கிறார். இவர் நேற்று பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அப்போது தன்னுடைய கழுத்தில் 5 கிலோ வரையில் தங்க நகைகளை அணிந்திருந்தார். இதனை கோவிலில் உள்ள பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர். மேலும் அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
