
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை, டவுன் பாறையடி பகுதிகளில் கழுகுகள் வேட்டையாடப்பட்டு அவைகள் விடுதிகளுக்கும் கோழி இறைச்சிக்கு மாற்றாகவும் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி பேட்டை மற்றும் டவுன் பாரையாடி பகுதியில் 3 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரித்த பொழுது அவர்கள் அங்கு பொறி வைத்து கழுகுகளை வேட்டையாடி கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் வைத்திருந்த நான்கு கழுகுகளை பறிமுதல் செய்ததோடு கழுகுகளையும் பறவைகளையும் வேட்டையாடுவதற்காக வைத்திருந்த உபகரணங்கள் மற்றும் கோழி இறைச்சி கழிவுகளையும் பறிமுதல் செய்தனர். கழுகுகள் வேட்டையாடப்பட்டு இறைச்சிக்காகவும் உணவு விடுதிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வெளியான தகவல் திருநெல்வேலியிள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது