நாட்டின் 77-வது குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு இடையே, மகாராஷ்டிராவில் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மோகன் ஜாதவ் என்ற காவல் அதிகாரி, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
<a href="http://

“>
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தீவிர மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பணியின் போது காவல் அதிகாரி ஜாதவ் நிலைகுலைந்து விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

மிகவும் கடமை உணர்வு மிக்கவராகவும், ஒழுக்கமான அதிகாரியாகவும் அறியப்பட்ட அவரது மறைவு, காவல்துறை வட்டாரத்திலும் அவரது குடும்பத்தினர் இடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு தின பாதுகாப்பு பணிக்காக அதிகாலை முதலே விழிப்புடன் பணியாற்றி வந்தவர் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.