கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சமீபத்தில் அதிகாலை நேரம் சாலையில் இரு பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த ஒரு வாலிபர் திடீரென ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ  சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பற்றி தற்போது கர்நாடக மாநில அமைச்சர் சொன்ன விஷயம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இது தொடர்பாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா கூறியதாவது,

பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் இது போன்ற நடப்பது சர்வசாதாரணம். இதேபோன்று அங்கு ஒன்று இங்கு ஒன்று என்று அடிக்கடி நடந்து கொண்டு தான் இருக்கிறது. நான் ஒவ்வொரு பகுதியிலும் ரோந்து பணியில் ஈடுபட்ட வேண்டும் என்று போலீஸ் கமிஷனருக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்று கூறினார். இதேபோன்று கடந்த 2017 ஆம் ஆண்டும் இவர் பெண்கள் மீதான ஒரு பாலியல் வழக்கில் அலட்சியமாக பதில் வழங்கினார். மேலும் தற்போது பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் இது போன்ற நமது சம்பவங்கள் நடப்பது சகஜம் தான் என்று அவர் கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் பாஜகவினர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.