பிக்பாஸ் சீசன் 3 வாயிலாக தமிழகத்தில் பிரபலமானவர் லாஸ்லியா. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் லாஸ்லியா ப்ரென்ட்ஷீப் திரைப்படத்தின் வாயிலாக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.  கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து, நடித்த “கூகுள் குட்டப்பா” படத்தில் லாஸ்லியா முக்கியமான வேடத்தில் நடித்தார்.

தற்போது மேலும் சில படங்களில் லாஸ்லியா நடித்து வருகிறார். லாஸ்லியா சினிமாவில் நடிக்க தொடங்கியதும், உடல் எடையை குறைத்து வருகிறார். லாஸ்லியாவின் சமீபத்திய போட்டோவை பார்த்து ரசிகர்கள் உருகி வருகின்றனர். அதாவது, நீங்கள் குண்டாக இருக்கும்போது அழகாக இருந்தீர்கள். ஆனால் இப்போது உடல் மெலிந்து உங்க அழகு போயிடுச்சு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.