நமது சிறுவயது நினைவுகளில் நீங்காத இடம்பிடித்த கார்ட்டூன் என்றால் அது ‘டோரேமான்’ தான். நீல நிற ரோபோ பூனையான டோரேமானும், அதன் நண்பன் நோபிதாவும் வாழும் அந்த அழகான கற்பனை உலகம் நிஜத்தில் எப்படி இருக்கும் என்று நாம் பலமுறை யோசித்திருப்போம். தற்போது அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவைச் சேர்ந்த சர்தக் சச்தேவா என்ற இளைஞர், டோரேமான் கார்ட்டூனில் வரும் அதே போன்ற இடத்தை நேரில் காண்பதற்காக இந்தியாவிலிருந்து சுமார் 6,000 கிலோமீட்டர் பயணம் செய்து ஜப்பானுக்குச் சென்றுள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஜப்பானின் ஒரு அமைதியான பகுதியில் உள்ள சிறிய வீடுகள், குறுகிய சந்துகள் மற்றும் சுத்தமான சாலைகள் அப்படியே கார்ட்டூனில் வருவது போலவே தத்ரூபமாக இருக்கின்றன. நோபிதா பள்ளிக்குச் செல்லும் அந்தச் சாலைகளையும், நண்பர்களுடன் விளையாடும் இடங்களையும் நேரில் பார்த்த அந்த இளைஞர் மிகுந்த உற்சாகமடைந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Sarthak Sachdeva (@sarthaksachdevva)

“>

இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “எங்கள் சிறுவயது நினைவுகள் மீண்டும் உயிர் பெற்றுவிட்டன” என்று நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். டோரேமானின் அந்த அமைதியான உலகத்தை நிஜத்தில் காண்பது பலருக்கும் ஒரு கனவு நனவானது போன்ற உணர்வைத் தந்துள்ளது.