நேபாள தலைநகர் காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் திடீரெனத் தீப்பிடித்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்தான்புல்லில் இருந்து 277 பயணிகளுடன் வந்த TK726 என்ற அந்த விமானம், ரன்வேயில் தரையிறங்கியபோது எதிர்பாராதவிதமாக அதன் சக்கரங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதனால் விமானம் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறத் தொடங்கினர். உடனடியாகச் செயல்பட்ட மீட்புக் குழுவினர், அவசர காலக் கதவுகள் வழியாகப் பயணிகளைப் பத்திரமாக வெளியேற்றினர்.
काठमांडू एयरपोर्ट पर बड़ा हादसा टला ✈️
लैंडिंग के दौरान टर्किश एयरलाइंस के विमान में लगी आग पर काबू पा लिया गया है। विमान में सवार सभी 277 यात्री सुरक्षित बताए गए हैं। इस्तांबुल से आए TK726 विमान के पहियों में लैंडिंग के वक्त आग लगी, जिसके बाद यात्रियों को इमरजेंसी गेट से बाहर… pic.twitter.com/kcm9pcYv67
— AajTak (@aajtak) May 11, 2026
“>
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றும், அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து காரணமாகக் காத்மாண்டு விமான நிலையத்தின் ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டதால், பல சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
