கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் இன்று (ஏப். 18) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைத் மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார்.

அதிமுகவில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்துள்ள செங்கோட்டையன், கடந்த சில நாட்களாக அதிமுக தலைமைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நான் முதலமைச்சராக இருந்தபோது செங்கோட்டையன் பற்றிப் பல ஆதாரங்களைத் திரட்டி வைத்துள்ளேன்.

அவற்றை வெளியிட்டால் அவர் வெளியில் தலைகாட்ட முடியாது, அசிங்கமாகப் போய்விடும்” என்று ஆவேசமாக எச்சரித்தார். அதிமுகவின் கோட்டையான கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் துரோகம் செய்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் துரோகிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் முழங்கினார்.

“>