அக்னிவீர் திட்டம் என்பது இந்தியாவின் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று நிலை ஆயுதப் படைகளிலும் ஆட்சேர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த  திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அக்னிபத் திட்டம் செப்டம்பர் 2022 முதல் செயல்படுத்தபட்டது.

இந்நிலையி அக்னிவீர் தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பை 21இலிருந்து 23 ஆக அதிகரிக்க அரக்கு ராணுவம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டதாரிகளுடைய தொழில்நுட்பத் திறனை ராணுவத்தில் பயன்படுத்துவதற்கு வயது வரம்பு அதிகரிப்பு உதவும் என்று ராணுவ உயர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.