இராணுவத்தில் இளைஞர்கள் சேருவதற்கு அக்னிபாத் என்ற திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 4 ஆண்டு கால ஒப்பந்தத்தில் வீரர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். இவர்களுக்கு அக்னி வீரர்கள் என்று பெயர். இதற்கு, மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 50,000 வீரர்கள் வரை நியமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அக்னிபாத் திட்டம் தேசிய முக்கியத்துவத்தை முன்வைத்து கொண்டுவரப்பட்டதால், முப்படையில் அக்னி வீரர்களை சேர்க்கும் திட்டத்திற்கு எதிரான மனுவை தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது.