டெல்லியில் உள்ள கங்காராம் நினைவு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசியதாவது, நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்குகளின் எண்ணிக்கையை பார்க்கும் போது மருத்துவ கல்வி முறையில் மாற்றம் தேவை என்பது தெரிகிறது. மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதில் தலையிட வேண்டியது நீதிமன்றத்தின் கடமை.

அரசின் கொள்கை சார்ந்த முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்றாலும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மாற்றம் செய்ய வேண்டியது அரசின் கடமை என்று கூறினார். மேலும் தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.