அக்டோபர் 27ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். அக்டோபர் 27 முதல் டிசம்பர் 12 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் உள்ளிட்டவற்றிற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். டிசம்பர் 26 வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜனவரி 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.

மேலும் 01/04/2024, 01/07/2024, மற்றும் 01/10/2024 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.