தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக பல மாவட்டங்களை சேர்ந்த மண்டல அலுவலர்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர் கீதா ஜீவன், தலைமை ஆண்டு வருமானம் அதிகம் உள்ளவர்கள், முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை பெறுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கப்படவில்லை. ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு இணைப்பில் ஏதாவது தவறுகள் இருந்தால் அவர்களுக்கு வேறு வங்கிகளில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தகுந்த கண்காணிப்பின் கீழ் செய்யப்பட்டு வருகின்றது. அரசு வாக்குறுதி அளித்ததை போல ஆயிரம் ரூபாய் உரிமை தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும். மறு மேல் முறையிட்ட விண்ணப்பப் பணிகள் எந்தவித தோய்வு இன்றி சீராக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.