திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் மலை அடுக்கும் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை. நேற்று முன்தினம் இவரது மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு செல்ல துறையின் மகன் ராஜசேகர்(25) தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஊட்டியைச் சேர்ந்த தீபிகா(20) என்ற இளம் பெண்ணுடன் வந்துள்ளார்.

திருமணம் முடிந்த பிறகு இரவு 11 மணிக்கு ராஜசேகர் தீபிகாவுடன் ஜீப்பில் சாமக்காட்டு பள்ளத்திற்கு புறப்பட்டார். ஒரு ஆபத்தான வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலை 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததால் ராஜசேகரும் தீபிகாவும் படுகாயம் அடைந்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் அங்கு யாரும் வரவில்லை.

நேற்று அதிகாலை தோட்ட வேலைக்கு சென்ற சிலர் ஜீப் கவிழ்ந்து கிடந்ததை பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 2 பேரையும் மீட்டனர். ஆனால் தீபிகா உயிரிழந்துவிட்டார். படுகாயங்களுடன் ராஜசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.