
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவரது டவுசரில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்று காவல்துறையினருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் எழுதி இருந்ததாவது “எனது மனைவி அவளது சொந்த சகோதரனுடன் தகாத உறவில் இருக்கிறார்.
அதனை நான் என் கண்ணால் பார்த்தேன். இந்த உறவை கைவிடுமாறு கூறியபோது அக்காவும் தம்பியும் சேர்ந்து என்னை தாக்கினார்கள்” என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே தற்கொலை செய்து கொண்ட நபரின் தந்தை காவல் நிலையத்தில் தனது மருமகள் மீது புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து கடிதத்தையும் கருத்தில் கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.