இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பொறுத்து பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வருடமும் வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகிறது. அதன்படி கடந்த வருடம் மே மாதம் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த வட்டி விகிதம் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்து வருகிறது. இருந்தாலும் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்த நிலையில் உள்ளது. அதன்படி தற்போது பிக்சட் டெபாசிட் திட்டத்தில் எந்தெந்த வங்கிகளில் மூத்த குடிமக்கள் மற்றும் பொது வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்

சூர்யோதாய் சிறு நிதி வங்கியில் FD விகிதம் 4.5% முதல் 9.6% வரையிலும், ESAF சிறு நிதி வங்கியில் 4.5% முதல் 9% வரை

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் 4.5% முதல் 9.5% வரை

ஜன சிறு நிதி வங்கியில் 4.25% முதல் 9% வரை

Equitas சிறு நிதி வங்கியில் 4% முதல் 9% வரை

ஃபின்கேர் சிறு நிதி வங்கியில் 3.6% முதல் 9.11% வரை

வடகிழக்கு சிறு நிதி வங்கியில் 3.75% முதல் 9.25% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

மேலும் மூத்த குடிமக்களுக்கு RBL வங்கியில் 4% முதல் 8.3%., HDFC வங்கியில் 4.00% முதல் 8.00%,  Yes வங்கியில் 3.75% முதல் 8.25%, IndusInd வங்கியில் 4.25% முதல் 8.25%ம், Bhandhan வங்கியில் 3.75% முதல் 8.35% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.