நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, பாபா சாகிப் அம்பேத்கரை இரண்டு முறை காங்கிரஸ் தோற்கடித்துள்ளது. மேலும் அம்பேத்காரின் உடை குறித்தும் விமர்சனம் செய்தார்கள். அவரது புகைப்படத்தை கூட அவையில் வைக்கவில்லை. பாபு ஜெகஜீவன் ராம் இவர் எமர்ஜென்சியின் போது கேள்வி எழுப்பினார். அந்த சமயத்தில் இவர்கள் அவரையும் விட்டுவிடவில்லை.

மெராஜிபாய் தேசாய்,  சர்ன் சிங்க், சந்திர சேகர் என நீங்கள் எத்தனை பேரை வேணும்னாலும் எடுத்துக் கொள்ளுங்கள். இவர்களுடைய இந்த தர்பார் வாதத்தின் காரணமாக இவர்கள் அனைவரையும் இவர்கள் அனுப்பிவிட்டார்கள். அவர்களின் படத்தை கூட நாடாளுமன்றத்தில் வைக்கவிடவில்லை. 1990-இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அவரது புகைப்படம் பாராளுமன்றத்திற்குள் வந்தது. லோகியாவின் படம் எப்போது வந்தது ?1991.

நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ்ஸின் உருவப்படம் சென்டர் ஹாலில் எப்போது வந்தது ? லால் பகதூர் சாஸ்திரி, சரண்சிங் இவர்களின் உருவப்படங்கள் 1993இல் எங்கள் அரசால் கொண்டுவரப்பட்டது. முக்கியமானவர்கள் பலரது புகைப்படங்களை எங்கள் ஆட்சியில் தான் சபைகளில் கொண்டு வந்தோம். சர்தார் பட்டேலையும் காங்கிரஸ் மதிக்கவில்லை.

ஆனால் நாங்கள் உலகிலேயே பெரிய சிலையை அவருக்கு வைத்துள்ளோம். டெல்லியில் பிரதமர் அருங்காட்சியகத்தை நாங்கள் அமைத்துள்ளோம். எல்லா பிரதமருக்கும் நாங்கள் மரியாதை செலுத்தியுள்ளோம். தங்களது குடும்ப உறுப்பினரைத் தவிர வெளியில் இருந்து யாரும் பிரதமராவது அவர்களுக்கு பிடிக்கவில்லை என தெரிவித்தார்.