நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… நம்முடைய திமுக நண்பர்கள் கேட்டு கொள்ளட்டும் UPA  கூட்டணிக்கு தேசத்தின் பெயரை உபயோகப்படுத்தி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் காங்கிரஸின் நண்பர்கள் நம்முடைய நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். தமிழ்நாட்டிலே ஆட்சியில் இருக்கும் ஒரு மந்திரி இந்தியா என்பதை நாங்கள் மதிக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

அவர்களை பொறுத்தவரை தமிழ்நாடு என்பது இந்தியாவில் இல்லவே இல்லை. மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே நான் இங்கு கர்வத்தோடு சொல்ல விரும்புகிறேன் தேசபக்தியின் முழக்கம் வெளிவந்த பகுதி தமிழ்நாடு எந்த ராஜ்யத்தில் இருந்து ராஜாஜி வந்தாரோ, காமராஜர் வந்தாரோ, எம்ஜிஆர் வந்தாரோ, எந்த மாநிலத்தில் இருந்து அப்துல் கலாம் வந்தாரோ அந்த தமிழ்நாட்டை இவர்கள் இந்தியாவிடம் இருந்து பிரிக்க பார்க்கிறார்கள்.

மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே பெயரை வைத்துக்கொண்டு வேலை செய்வது அவர்களது இன்றைய வழக்கமல்ல. இது பல வருடங்களுக்கு முன்பே அவர்களிடம் இருக்கும் வழக்கம். பெயர் மாற்றம் செய்துவிட்டு நாட்டை ஆண்டு விடலாம் என்று நினைக்கிறார்கள். நான்கு புறமும் இவர்களது பெயர் நன்றாக தெரியும். ஆனால் இவர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை. மருத்துவமனைகளின் பெயர் அவர்களுடையது தான் ஆனால் அங்கே சிகிச்சை நடப்பதில்லை.

பூங்காக்கள், விளையாட்டு அரங்குகள், ஏழைகள் நல சங்கங்கள், விமான நிலையங்கள் என அனைத்திலும் அவர்களின் பெயர். ஆனால் இவை அனைத்திலும் அவர்கள் ஊழல் செய்துள்ளார்கள். சமுதாயத்தின் கடை கோடியில் இருக்கும் ஒருவன் இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான், ஆனால் அவனுக்கு கிடைத்தது ஒரு குடும்பத்தின் பெயர் மட்டும் தான்.

காங்கிரஸ் உடன் தொடர்புடைய ஒரு பொருளும் அவர்களுடையது அல்ல. சின்னத்தில் தொடங்கி கொள்கைகள் வரை எதுவும் அவர்களுடையது இல்லை. எல்லாம் வேறு நபர்களிடம் இருந்து அவர்கள் எடுத்துக் கொண்டது. மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே தங்களுடைய குறைகளை மறைப்பதற்காக சின்னம் மற்றும் கொள்கைகளை பிறரிடம் இருந்து திருடி இருக்கிறார்கள். எல்லாவற்றிலும் அவர்களின் ஆணவம் தான் தெரிகிறது. 1920 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு புதிய சக்தி கிடைத்தது. புதிய கொடி கிடைத்தது. நாடு அந்த கொடியை ஏற்றுக்கொண்டதும் காங்கிரஸ் உடனடியாக அந்தக் கொடியின் வலிமையை பார்த்து அதனை திருடி கொண்டது. 1920 லிருந்து இந்த விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது.

இந்திய மூவர்ண கொடியை பார்க்கும் போது காங்கிரஸ் கோடி மக்களுக்கு ஞாபகம் வரும் என்று அவர்கள் நினைத்தார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக காந்தியின் பெயரையும் அவர்கள் திருடி கொண்டார்கள். காங்கிரஸின் சின்னங்களை பாருங்கள் இரண்டு மாடுகள், பசுவும் கன்றும் பிறகு கை இந்த சின்னங்கள் எல்லாம் ஒரு குடும்பத்தின் கையில் அனைத்தும் அடங்கி விட்டது என்பதை நமக்கு தெரிவிக்கின்றது. இது இந்தியா கூட்டணி அல்ல ஒரு ஆணவ கூட்டணி. இது இந்தியா கூட்டணி அல்ல கமெண்ட்டியா கூட்டணி. இந்த கூட்டணியில் அனைவரும் பிரதம மந்திரி ஆக விரும்புகிறார்கள்.

மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே இந்த கூட்டணி எந்த மாநிலத்தில் எந்த கட்சியுடன் சேர்ந்து இருக்கிறார்கள் என்பது பற்றி யோசிக்கவில்லை. கடந்த வருடம் கேரளா வயநாட்டில் யாரெல்லாம் காங்கிரஸ் அலுவலகத்தை சேதப்படுத்தினார்களோ அவர்களுடன் எல்லாம் தற்போது கூட்டணி அமைத்துள்ளார்கள். வெளியில் நீங்கள் உங்களது லேபிளை மாற்ற முடியும் ஆனால் பழைய சம்பவங்கள் எங்கே செல்லும். இவை அனைத்தையும் நீங்கள் மறைத்து விட முடியாது. இப்போதைய நிலைமையில் இவர்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்துள்ளனர். ஆனால் நிலைமை மாறும் போது கைகளில் ஒருவர் முதுகில் ஒருவர் குத்திக் கொள்ள பயன்படும் கத்தி வெளிப்படும் என எதிர்கட்சிகளை சாடினார்.