ஹிஜாப் அணிந்து மசூதிக்கு சென்ற தி.மு.க எம்பி…. வெளியான அழகிய புகைப்படம்….!!!!!

திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து ஓமன் நாட்டிற்கு சென்ற அவர், மஸ்கட்டில் அமைந்துள்ள சுல்தான் காபூஸ் மசூதிக்கு சென்றார். அங்கு ஆண்களும், பெண்களும் அவர்களின் பாரம்பரிய வழக்கத்தின்படி உடைகளை அணிய வேண்டியது கட்டாயமாகும். அந்த வகையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஹிஜாப் அணிந்து மசூதிக்கு சென்றார்.

அதன்பின் ஹிஜாப் அணிந்தவாறு சுல்தான் கபூஸ் மசூதிக்கு சென்ற தமிழச்சி தங்கபாண்டியன், பாரம்பரியமிக்க அரேபிய கட்டிடக்கலைகளை ஆர்வமுடன் பார்த்து ரசித்தார். இதற்கிடையில் அந்த மசூதியில் நின்றவாறு தமிழச்சி தங்கபாண்டியன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை தன் டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.