வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இனி இந்தியாவில் தங்கள் வளாகங்களை அமைக்க யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது. சேர்க்கை செயல்முறை மற்றும் கட்டணத்தை நிர்ணயித்தல் உள்ளிட்டவையும் இங்கு பெறப்படும் நிதியை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு திருப்பி அனுப்பும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. ஆனால் இந்திய வளாகங்களில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும் தொலைதூர மற்றும் ஆன்லைன் படிப்புகளுக்கு அனுமதி இல்லை எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது.