திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரானா தொற்றுக்கு பின், சென்ற ஒரு வருடமாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக உண்டியல் வருவாயும் அதிகரித்து மாதத்துக்கு ரூபாய்.120 -ரூ.130 கோடி வரை வசூலானது. நாளொன்றுக்கு சுமார் 3 கோடிக்கு மேல் உண்டியல் வருவாய் வந்தது.

இந்நிலையில் சென்ற 2-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு 10 நாட்கள் சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான அறிவித்திருந்தது. இதற்கிடையில் வைகுண்ட ஏகாதசி மற்றும் தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்க வாசல் வழியாக பெரும்பாலான பக்தர்கள் தரிசனத்துக்கு வருவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.

எனினும் பக்தர்கள் கூட்டம் பாதியாக குறைந்துவிட்டது. திருப்பதியில் நேற்று 47,781 நபர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ரூபாய்.2.10 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியது. சென்ற ஓராண்டிற்கு பிறகு திருப்பதியில் ஊண்டியல் வருவாய் ரூபாய்.2 கோடி அளவுக்கு குறைந்துள்ளது.