நம் நாட்டில் நடைபெறும் தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜூகுமார் தெரிவித்துள்ளார். இதற்கு இ-போஸ்டல் பேலட் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த நவீன முறைகளை பயன்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களில் 1.15 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொது தேர்தல் மற்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் தெலுங்கானா, ராஜஸ்தான்,மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.