
வேலூர் மாவட்டத்தில் முகமது சனேகா (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு 10-ம் மாணவியிடம் செல்போனில் போட்டோ அனுப்புமாறு கேட்டுள்ளார். அதோடு வீடியோ கால் செய்யும்படியும் தொந்தரவு கொடுத்துள்ளார். ஒருவேளை அப்படி செய்யாவிடில் தேர்வில் மதிப்பெண்களை குறைப்பதாக ஆசிரியர் தொடர்ந்து அந்த மாணவியை மிரட்ட அவரும் பயந்து போய் தொடர்ந்து போட்டோ அனுப்பியதோடு வீடியோ காலும் செய்துள்ளார்.
இதனை அந்த ஆசிரியர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நிலையில் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.