கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் விஷ்வா(15) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் தனது நண்பர்களான அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவர் நித்திஷ்(18), மணிமாறன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை- திருச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த வாகனம் விஷ்வாவின் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஷ்வா, நித்திஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்த படுகாயம் அடைந்த மணிமாறன் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமாறன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது பிரசாந்த் என்பவரின் ஆட்டோ இருசக்கர வாகனம் எது மோதிவிட்டு நிற்காமல் சென்றது தெரியவந்தது. இதனால் தலைமறைவாக இருந்த பிரசாந்தை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.