திருமணம் முடிந்து தேனிலவுக்கு அறைக்கு சென்ற தம்பதி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

திருமணம் முடிந்து தேனிலவுக்கு அறைக்குச் சென்ற புதுமணத் தம்பதிகளின் சடலங்கள் காலையில் வெளியே வந்தன. உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் தம்பதியர் மாரடைப்பால் இறந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் திருமண வீட்டில் சோகமான சூழல் நிலவியது.

பிரதாப் யாதவ் (வயது – 30) மற்றும் புஷ்பா (வயது – 20) ஆகியோரின் திருமணம் மே 30 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, அனைத்து சடங்குகளும் முடிந்ததும், முதலிரவுக்கு தயாரானார்கள். இருவருக்கும் சிறப்பு அறையும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருமணத்தின் 2வது நாளில், அனைத்து பாரம்பரிய சடங்குகளும் முடிந்து, கணவன்-மனைவி இருவரும் தேனிலவை கொண்டாட அறைக்குச் சென்றனர்.

மறுநாள் காலை சூரியன் தலைக்கு மேல் வந்தும் இருவரும் கதவை திறக்காதது குடும்பத்தினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினர் முதலில் கதவைத் தட்டி தம்பதியை எழுப்ப முயன்றனர், ஆனால் உள்ளே இருந்து பதில் வராததால், கதவு உடைக்கப்பட்டது. யாதவ் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் தேனிலவுக்காக அலங்கரிக்கப்பட்ட படுக்கையில் இறந்து கிடந்தனர்.

குடும்பத்தினர் உடனடியாக போலீஸை அழைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அறிக்கை வெளிவந்துள்ளது. இருவரும் மாரடைப்பால் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, இருவரும் ஒரே தீயில் தகனம் செய்யப்பட்டனர். இது குறித்து பஹ்ரைச் மாவட்ட எஸ்பி பிரசாந்த் வர்மா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ‘இந்தியா டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது.

அதீத ஆர்வமா?

இதேவேளை, புதுமணத் தம்பதிகள் திருமணத்திற்குப் பின் ஏற்பட்ட உற்சாகத்தில் மூழ்கியிருக்கலாம் என்றும், தேனிலவு இரவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.