ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ரயில்வே இடத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உயிரிழந்தவர்களில் 70 முதல் 80 பேரை மட்டுமே அடையாளம் காண முடித்ததாகவும் சுமார் 200 பேரின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரேத அறையில் உள்ள அனைத்து சடலங்களுக்கும் DNA பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் தேடி வந்தால் இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காக இந்த சோதனை திட்டமிடப்பட்டுள்ளது.