திமுக வழக்கறிஞரின் செயலாளர் பரந்தாமன் என்று நாகர்கோவிலில் சபரி பர்மன் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் போலீஸ்காவில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர் பேசியதாவது, அஜித் குமார் உயிரிழுந்தபோது அன்றைய தினம் முதல்வராக இருந்த ஸ்டாலின் அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்ட நிலையில் சாரி வேண்டாம் எங்களுக்கு நீதிதான் வேண்டுமென்று அப்போது விஜய் சொன்னார். இன்று ரீல்ஸ் வேண்டாம் எங்களுக்கு நீதிதான் வேண்டுமென்று மக்கள் கேட்கிறார்கள். தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்று 60 நாட்களில் கிட்டத்தட்ட நான்கு பேர் நீதிமன்ற காவலில் உயிரிழந்துள்ளனர். விஜய் அரசு மீது கொலை பழி சுமத்துகிறோம் போலீசார் மீது வழக்கு பதிவு செய்யுங்கள்.
விஜய் ப்ரோ நீங்க சினிமாவில் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் ஜீரோ தான். நாட்டு மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு முதலில் தைரியமா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பதில் சொல்லுங்க. மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் பல்வேறு மர்மங்கள் நடப்பதாகவும் அரசு அதிகாரிகளை காவுக்கொடுத்து மாயை உருவாக்குகிறார்கள் என்றும் பழனி கோவில் விவகாரத்தில் சாடினார். மேலும் முன்னதாக பழனி கோவிலில் 100 கோடி பத்திரப்பதிவு மோசடி நடந்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் கூறிய நிலையில் அது தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருவதாக விளக்கம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது அதோடு இந்த விவகாரத்தில் யாரும் தேவையில்லாத கருத்துக்களை பரப்ப கூடாது என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
