சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது.

அதாவது, அஸ்ஸாமிலுள்ள மனாஸ் தேசிய பூங்காவில், ஒற்றை கொம்பு காண்டாமிருகம் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்துகின்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை (டிச. 29) நடந்ததாகவும், இதில் யாருக்கும் காயமேற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அந்த விலங்கு வாகனத்தை நீண்ட தூரத்திற்கு துரத்தி வருவது வீடியோவில் பதிவாகியுள்ளது..