கர்நாடகாவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது, பெங்களூரு தொகுதியில் தனது ஓட்டுரிமை நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட குற்றச்சாட்டும், அதற்குத் தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கமும் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் பிறந்துகந்து, படித்து, கடந்த காலங்களில் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்ட தனக்கே வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரகாஷ் ராஜ், இது குறித்துச் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேலும், தன் போன்ற லட்சக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிப்பதன் மூலம் தங்களை முடக்கிவிட முடியாது என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
மத்திய அரசை மறைமுகமாகக் கண்டித்து அவர் வெளியிட்ட இந்த வீடியோ பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருவதோடு, எதிர்க்கட்சிகள் மத்தியில் விவாதப் பொருளகவும் மாறியுள்ளது. பிரகாஷ் ராஜின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்றும், அவர் கடந்த சில ஆண்டுகளாகப் பதிவு செய்யப்பட்ட முகவரியில் வசிக்காத காரணத்தினால் அந்தப் பகுதி சரிபார்ப்பின்போது ‘குடிபெயர்ந்தவர்’ (Shifted) என மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர் தனது புதிய முகவரிக்கான படிவத்தை நிரப்பி மீண்டும் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
Will the bona fide “omnipotent” joker Prakash Raj become the next Chief Minister of Karnataka?
The Karnataka state elections happened in 2023, and the Lok Sabha elections happened in 2024. The nationwide SIR process was announced on 27 October 2025.
What is this joker talking… https://t.co/og34H3ysCG pic.twitter.com/egBGX3fESi
— Praveen (@DrPraveenwrites) August 15, 2026
“>
நடிகர்களின் அரசியல் பிரவேசம் மற்றும் தேர்தல் கால விவாதங்கள் சூடுபிடித்துள்ள சூழலில், பிரகாஷ் ராஜின் இந்தச் சமீபத்திய சர்ச்சை தென்னிந்திய அரசியலில் மீண்டும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
