தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பாஜக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பொதுவெளிகளில் பகிரங்க குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். குறிப்பாக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காயத்ரி ரகுராம் கூறிவரும் நிலையில், அது தொடர்பாக அண்ணாமலை தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் அண்ணாமலை மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் காயத்ரி ரகுராம் அண்ணாமலை மீது தான் சுமத்தும் அனைத்து விதமான குற்றங்களுக்கும் தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி வருகிறார்.

இது தமிழக பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை காயத்ரி ரகுராம் தற்போது ஒரு புதிய அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அண்ணாமலைக்கு எதிராக தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை பாஜக மேல் இடத்திற்கு அனுப்புவதற்கு காயத்ரி ரகுராம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆதாரங்கள் மூலம் அண்ணாமலையின் பதவிக்கு சிக்கல் வரலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.