மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பேரிடர் காலங்களிலும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில்இனி ரேஷன் கடைகளில் அரிசி படிப்படியாக குறைக்கப்பட்டு சிறுதானியங்கள் வழங்கப்படும். என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக தர்மபுரி, நீலகிரியில் 2 கிலோ ராகி வழங்கப்பட இருக்கிறது. இது படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்த விவசாயிகளின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.